Posts

.மருத்துவம் மறந்த. மனிதர்கள்

இன்றைய அரசு மருத்துவமனைகளில் தான் அதிக பிரசவங்கள் நடக்கின்றன.என்று ஊடகங்களும் .அரசும் தெரிவிக்கின்றது அது உண்மையாகவும் இருக்கிறது.தமிழ்நாட்டில் கிராம புறங்களில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தான் அதிக அளவில் அறுவை சிகிச்சைகள் இல்லாமல் ஆப்ரேசன் இல்லாமல் சுகப்பிபிரசவங்கள் நடக்கிறது அந்த பணிகளில் நர்சுகளின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ  அதே அளவு முக்கியமான பணிகளை அந்த சுகாதார நிலையங்களில் பணிபுரிகின்ற துப்புரவு பணியாளர்கள் பார்க்கின்றனர் இந்த பணியாளர்களின் மாத சம்பளம் ரூபாய் 1500/- தான் என்றும் அதில் மாதம் பி.எஃப்.பிடித்தம் ரூபாய் 180/- பிடித்தம் போக மீதம் தான் ஊதியம் என்கிறார்கள்.அதுவும் அதுகூட தொடர்ந்தும் கிடைக்காது என்கிறார்கள் உண்மையா? தெரியவில்லை சிலநேரம் ஊதியத்திற்காக 3அல்லது,4 மாதங்கள் காத்திருக்க வேண்டியும் வரும் என்கிறார்கள் .அவர்கள் அப்படி சொல்வதை நம்பவும் முடியவில்லை! நம்பாமல் இருக்கவும் முடியவில்லை! அதே பணிகளில் சிலர் ஐந்து  வருடங்களுக்கும் மேலாக பணிபுரிகின்றார்களாம்.என்று சமீபத்தில் என் நன்பனின் மகள்  பிரசவத்திற்காக எங்கள் கிராமத்தில் உள்ள சுஅ...
Recent posts